இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்
பாணினி
பரிபாடல் அடி வரையறை யாது
25 முதல் 400 அடிவரை
வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது
பட்டினப்பாலை
சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்
நம்மாழ்வார்
தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவர் யாரைக் குறிப்பிடுகின்றார்
திருத்தக்கதேவரை
சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்
மண்டலபுருடர்
மாதேவடிகள் எனப்படுபவர் யார்
சேக்கிழார்
முகையதீன் புராணம் பாடியவர் யார்
வண்ணக்களஞ்சியப்புலவர்
மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்
தத்துவபோதகசுவாமிகள்
தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது
கால்டுவெல்ஐயர்
அசோமுகி நாடகம் எழுதியவர் யார்
அருணாசலகவி
முன்கிரின்மாலை எழுதியவர் யார்
நயினா முகம்மது புலவர்
தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்
கனக சுந்தரம் பிள்ளை
ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்
எஸ். வையாபுரிப்பிள்ளை
விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை
கி.வா.ஜகந்நாதன்
மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.
மாங்குடிமருதனார்
தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.
திருக்கைலாய ஞான உலா
திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.
டாக்டர் கால்டுவெல்
நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?
நாற்கவிராசநம்பி
ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்
மு.வரதராசன்
சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்
படிக்காசுப்புலவர்
காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன
வரதர்
நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது
வெற்றிவெட்கை
மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன
வேதாசலம்.
பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்
ஒளவையார்
ஒன்றேகுலம், ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்
திருமூலர்
பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன
திருத்தொண்டர்புராணம்
புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது
புறநானூறு
குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்
ராஜம் கிருஷ்ணன்
காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது
வெண்பாவிற்கு உரியது
மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை
வ.வே.சு.ஐயர்
பாலங்கள் யார் எழுதிய நாவல்
சிவசங்கரி
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ
என்று பாடியவர் யார்
பாரதியார்
திருமுருகாற்றுப்படை ஆசிரியர் யார்
நக்கீர்
முதற்சங்கம் இருந்த இடம் எது
தென்மதுரை
உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது
புறநானூறு
நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது
ஆண்டாள்
ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார்
மாறன் பொறையனார்
கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்
ஒட்டக்கூத்தர்
பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்
வேதநாயகம்பிள்ளை
உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார்
சுரதா
கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன
முத்தையா
சீதக்காதி என வழங்கப்படுபவர் யார்
செய்து காதர்மரைக்காயர்.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்
பாரதிதாசன்
மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
பரிதிமாற்கலைஞர்
காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார்
மு.வரதராசன்
மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன
கூத்தராற்றுப்படை
தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்
புதுமைப்பித்தன்
கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்
கி.ராஜநாராயணன்
பாண்டியன் பரிசு யார் படைப்பு
பாரதிதாசன்
புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்
கலைஞர் கருணாநிதி
சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்
கவிஞர் தமிழழகன்
ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்
சவ்வாதுபுலவர்
மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்
வள்ளலார்(இராமலிங்கஅடிகள்)
இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
மீரா இவரின் முழுப்பெயர் என்ன
மீ.ராஜேந்திரன்
வஞ்சி மாநகரம் யார் எழுதிய ஆராய்ச்சி நூல்
இரா.இராகவையங்கார்
பண்டிதமணி என அழைக்கப்படுபவர் யார்
மு.கதிரேசன் செட்டியார்
தமிழர் மதம் என்ற நூலின் ஆசிரியர் யார்
மறை மலையடிகள்
No comments:
Post a Comment